2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சீன ஆக்கிரமிப்பு: கிழக்கு தாய்வானின் பாதுகாப்பு பலப்படுகிறது

Freelancer   / 2022 மே 18 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன ஆக்கிரமிப்புக்கு மத்தியில், தாய்வானின் கிழக்குப் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்பு வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தாய்வானின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் சீன கடற்படையின் சமீபத்திய நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக வல்லுநர்கள் கூறியதாக தாய்வான் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன விமானம் தாங்கிப் போர்க்கப்பலான லியோனிங் மற்றும் கிழக்கு தாய்வான் அருகே விமானங்கள் சமீபத்தில் தோன்றியுள்ளமை, தாய்வான், அமெரிக்கா மற்றும் ஜப்பானின் இந்தோ-பசுபிக் மூலோபாயத்துக்கு நேரடி சவாலாக உள்ளது என்று செஞ்சி தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரக் கல்லூரியின் இணைப் பேராசிரியரான சென் வென்-சியா குறிப்பிட்டுள்ளார் என்று லிபேர்ட்டி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன கடற்படை கப்பல்கள் தாய்வானின் கிழக்கில் வான் வழி அச்சுறுத்தலை ஏற்படுத்தும், எனவே தேசத்தின் வான் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவது மற்றும் மேலதிக ஓடுபாதைகள் இருப்பது அவசியம், என்று தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் ஷு சியாவோ-ஹுவாங் கூறினார்.

எதிர்காலத்தில், தாய்வானினால் புதிதாக வாங்கப்பட்ட F-16V  மூலம் கப்பல் எதிர்ப்பு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவின் பிரதான நிலப்பரப்பின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 24 மில்லியன் மக்களைக் கொண்ட தாய்வான் மீது முழு இறையாண்மையை பீஜிங் கோருகிறது. 

மறுபுறம், அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளுடன் மூலோபாய உறவுகளை அதிகரிப்பதன் மூலம் சீன ஆக்கிரமிப்பை தாய்பேய் எதிர்கொண்டது.

இது பீஜிங்கால் பலமுறை எதிர்க்கப்பட்ட நிலையில் "தாய்வான் சுதந்திரம்" என்றால் “போர்“ என்று சீனா மிரட்டுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .