2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சீனாவிலுள்ள திபெத்தியர்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை

Freelancer   / 2022 ஜனவரி 20 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து சமீபகாலமாக பீஜிங் அதிகரித்து வரும் நடவடிக்கைகளால் சீனாவில் வாழும் திபெத்தியர்களின் அவலநிலை தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் உட்பட திபெத்திய பௌத்தர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், புத்தர் சிலைகளை அழித்தல், பிரார்த்தனை சக்கரங்களை அகற்றுதல் மற்றும் பிரார்த்தனைக் கொடிகளை எரித்தல் போன்ற செய்திகளால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம் என்று வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

திபெத்தியர்கள் தங்கள் நம்பிக்கைகளை சுதந்திரமாக கடைப்பிடிப்பதற்கான உரிமையை மதிக்குமாறு அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் சர்வதேச மத சுதந்திர அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நோக்கமாக, அனைவருக்கும் மத சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான உலகளாவிய மரியாதையை சர்வதேச மத சுதந்திர அலுவலகம் ஊக்குவிக்கிறது. 

உலகெங்கிலும் உள்ள மதரீதியிலான துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளை நாங்கள் கண்காணித்து, இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் பரிந்துரைக்கிறோம், உருவாக்குகிறோம், செயல்படுத்துகிறோம் என்றும் அலுவலகம் கூறியுள்ளது.

சீன அதிகாரிகள், திபெத்திய குழந்தைகளை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பத் தொடங்கியதாகவும் அவர்களைப் போராளிக் குழுவில் சேர்க்கத் தயார்படுத்தும் வகையில் அவர்களுக்கு அடிப்படை இராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது
 
சீன சமூகக் கட்சி, திபெத்திய தன்னாட்சிப் பிராந்தியத்தின் மக்கள் தொகையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளில் செயற்படுகிறது என்று திபெத்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பீஜிங்கை தளமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தால் திபெத் ஆளப்பட்டு, சீனக் கட்சி அதிகாரிகளின் கைகளில் உள்ளூர் முடிவெடுக்கும் அதிகாரம் குவிந்துள்ளது.

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு முன்னர், 1950 இல் மக்கள் விடுதலை இராணுவம் வடக்கு திபெத்தில் நுழைந்தபோது,  திபெத் இறையாண்மை கொண்ட நாடாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X