2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்சுங் துணை தலைவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யக்க மருந்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய வழக்கில் சம்சுங் நிறுவனத்தின் துணைத் தலைவர் லீ  ஜே யங்( Lee Jae-yong) குற்றவாளி என சியோல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுமார் 10 பில்லியன் டொலர்கள் சொத்து மதிப்புடன் உலகின் 238ஆவது செல்வந்தராக உள்ள Lee-க்கு 60,000 டொலர்கள்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எடுத்துக்கொண்ட அதே மயக்க மருந்தைத் தான் பிரபல பாடகர் மைக்கேல் ஜக்சன் அளவுக்கு மீறி செலுத்திக்கொண்டு உயிரிழந்ததாகக்  கூறப்படுகிறது. 

ஏற்கனவே லஞ்சம் மற்றும் பண மோசடி வழக்கில் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று அவர்  பரோலில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .