2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பளத்தை உயர்த்திய அரச அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை

Ilango Bharathy   / 2022 ஜனவரி 02 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஹ்ரைனில் அதிக அளவில் ஓய்வூதியத் தொகைப் பெறுவதற்காக அரச  அதிகாரி ஒருவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ள சம்பவமொன்று அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு 1950 தினார்கள் மாதச் சம்பளத்தில் நியமிக்கப்பட்ட குறித்த நபர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது சம்பளத்தை 2100 தினார்களாக  மாற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இவ் விவகாரம் தெரியவந்ததும் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு வழங்கப்பட்டிருந்த தனிப்பட்ட அடையாள எண்ணைப்  பயன்படுத்தி சம்பளத்தை 3300 தினார்களாக திருத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவே   விசாரணையின் முடிவில் அவர் மீதான  குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானது. 

இதையடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், 15,000 தினார் அபராதமாக விதித்தும்  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .