2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சரிவடையும் பைடனின் செல்வாக்கு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செல்வாக்கு கடுமையாகச் சரிவடைந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த கருத்துக் கணிப்பின் படி  ” அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்று முதல் 3 மாதங்களில் அவரது செல்வாக்கு 56% ஆக உயர்ந்திருந்த நிலையில் தற்போது 11.3 % ஆகக் குறைந்து 44.7% ஆக உள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஆம்  உலகப்போருக்குப் பின்னர் எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் இப்படி ஒரு சரிவைச் சந்தித்தது இல்லை எனக் கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

ஜூலை மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவில் மீண்டும் கொரோனாப் பரவல் அதிகரித்தமை  மற்றும் குழப்பமான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப்பெற்றமை  போன்ற காரணங்களால் ஜோ பைடனின் செல்வாக்குச் சரிந்ததாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .