2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சினோவக் எதிர்ப்புசக்தி இல்லாமல் போக ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 27 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சினோவக் பயோடெக் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றவர்களின் எதிர்ப்பு சக்தியானது, இரண்டாவது தடுப்பு மருந்தைப் பெற்ற ஆறு மாதங்களில் குறைவடைய ஆரம்பிப்பதாக சீனாவைத் தளமாகக் கொண்ட ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளையும் இரண்டு வாரங்களுக்குள் பெற்றவர்களில் 16.9 சதவீதமானோரும், நான்கு வாரங்களுக்குள் பெற்றோரில் 35.2 சதவீதமானோருமே, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற ஆறு மாதங்களில் கொரோனாவை எதிர்கொள்ளக்கூடிய எதிர்ப்புசக்தியைக் கொண்டிருப்பதாக, நேற்று முன்தினம் பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .