2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சியர்ரா லியோன் வெடிப்பில் 99 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 06 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியர்ரா லியோன் தலைநகர் பிறீடெளணில், லொறியொன்றுடன் எண்ணெய்த் தாங்கியொன்று மோதியபோது பாரிய வெடிப்பு ஒன்றில் குறைந்தது 99 பேர் உயிரிழந்துள்ளனர்.  

தீப்பற்றுவதற்கு முன்னர் எண்ணெய் கசிந்த நிலையில், தீப்பிழம்பானது நெருக்கடியான சந்தியொன்றில் அருகிலிருந்தவர்களையும், வாகனங்களையும் சூழ்ந்திருந்தது.

இந்நிலையில், பிறீடெளணிலுள்ள வைத்தியசாலைகளிலும், சுகாதார நிலையங்களிலும் 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .