2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘சீன தாக்குதல் அச்சுறுத்தல் எதிர்பார்த்ததைவிட வேகமானது’

Editorial   / 2021 ஜூலை 25 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா அதன் விமான தாக்குதல் திறன்களை அமெரிக்க இராணுவ திட்டமிட்டாளர்கள் மூன்று வருடங்களுக்கு முன்னர் தம் தேசிய ஆலோசனைக்கூட்டத்தில் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக வெகுவேகமாக கட்டமைத்துவருகிறது என அமெரிக்க விமானப்படை ஜெனரல் நாஹொம் தெரிவித்தார்.

கடற்படை மற்றும் விமானப்படை ஆயுத அமைப்புகள் பிரச்சினைகள்பற்றி பேசுகையிலேயே அவர் இதனைக்கூறினார்.

“சீனா, விமானதாக்குதல் உட்பட அதன் இராணுவ சக்தியை இயன்றவரை மிக வேகமாக  விரிவுபடுத்தவே முயற்;சி செய்கிறது” என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

“நாம் காணவிரும்பும் எதிர்காலத்தைவிட வேறுபட்ட ஓர் எதிர்காலத்தை அவர்கள் காணவிரும்புகின்றார்கள். அதற்கான செயல்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்ப​தையே சீனாவின் நடவடிக்கைகள் நமக்கு எதை உணர்த்துகின்றது” என்றும் நாஹொம் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க விமானப்படை தனது 2022 நிதியாண்டு பட்ஜெட் கோரிக்கையுடன் 200க்கும் அதிக விமானங்களை திசைதிருப்ப திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .