2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீன வெள்ளத்தில் சர்வதேச ஊடகவியலாளர் துன்புறுத்தல்

Editorial   / 2021 ஜூலை 30 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீஜிங்(சீனா)

சீனாவில் ஹெனான் வெள்ளம் தொடர்பாக செய்தி சேகரிக்கச்சென்ற சர்வதேச ஊடகவியலாளர்களை சீன நாட்டவர்கள் துன்புறுத்தினர் என செய்திகள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சீனாவில் ஏற்பட்ட  வெள்ளம் தொடர்பாக செய்திகள் சேகரித்ததற்கு சீன அரச ஊடகங்கள் அவற்றை தாக்கியதையடுத்தே சீன நாட்டவர்கள் பல வெளிநாட்டு ஊடகவியலாளர்களை துன்புறுத்தியுள்ளனர்.

சீனாவின் ஹெனான் மாகாண ஷெங்ஸூ நகர வீதிகளிலேயே பல சர்வதேச ஊடகவியலாளர்கள் இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளாகினர்.

சீன நகரங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு தொடர்பான செய்திகளை சர்வதேச ஊடகங்கள் சேகரித்தமையை சீன சமூக ஊடகமான வெய்போ கடுமையாக விமர்சித்து தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த விமர்சனமானது பி.பி.சி.யின் சீன பத்திரிகையாளர் ரொபின் பிரேண்டை முக்கியமாகக் கருத்தில்கொண்டே எழுதப்பட்டிருந்தது.

இவர் வெள்ளப்பெருக்குக்கு மத்தியில் ஒரு டசின்பேர் ரயில் பெட்டியில் இறந்ததற்கு அரசாங்க கொள்கைகளை கேள்விக்குறியாக்கி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததே இப்பிரச்சினைகளுக்குக் காரணம்.

மற்ற உள்ளுர் அரசாங்கங்கள் தங்கள் சொந்த விடயங்களை கவனித்துக்கொள்ளட்டும் என்று பீஜிங் கூறியதாக ரொபின் பிரேண்ட், பத்திரிகையாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார்.

ரொபின் அழிவுகளுக்குள்ளாகும் பகுதிகளுக்கு வந்து அங்கு நடப்பவற்றை திரிபுபடுத்தி செய்தி வெளியிடுவதாகவும் வதந்தி பரப்புவதாகவும் சீன நாட்டவர்கள் அவரை குற்றம்சாட்டினர்.

அவரைக்கண்டால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சில ஆத்திரக்காரர்கள் சர்வதேச பத்திரிகையளர்கள் சிலரை சுற்றிவளைத்ததாகவும் தெரிய வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .