2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சீனாவிடம் அமெரிக்கா கவலை

Editorial   / 2021 ஜூலை 28 , பி.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீஜிங்(சீனா)

அமெரிக்க வெளியுறவு இராஜாங்க செயலாளர் வென்டி ஷெர்மன், சீன வெளியுறவு அமைச்சர் வங் யீ யை கடந்த திங்களன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது ஹொங்கொங்கில் பீஜிங்கின் ஜனநாயக விரோத ஒடுக்குமுறை, மற்றும் ஷின்ஜியாங்கில் நடந்து வரும் இனப்படுகொலை உட்பட பல்வேறு மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக தமது கவலையை வெளியிட்டார்.

அத்துடன் சீனா நடத்தியதாக நம்பப்படும் சைபர் தாக்குதல் பற்றியும் தம் கவலையை தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் மற்றும் கொவிட்-19 தொற்று தொடர்பான இரண்டாம் கட்ட விசாரணைக்கு சீனாவின் விருப்பமின்மை என்பன பற்றியும் ஷெர்மன் தமது அதிருப்தியை வெளியிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .