2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சீனாவின் கடும்போக்கு கொள்கைக்கு எதிர்ப்பு

Editorial   / 2021 ஜூலை 24 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

டோக்கியோ (ஜப்பான்)

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் கடும்போக்கு கொள்கைக்கு மத்தியில் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தாம் கிழக்கு சீனக்கடலில் மாற்றம் ஏற்படுத்தும் எந்தவோர் ஒருதலைப்பட்ச முயற்சிகளையும் எதிர்ப்பதாக கூறியுள்ளன.

அத்துடன் தாய்வான் கடற்பரப்பில் அமைதியையும் ஸ்திர தன்மையையும் ஏற்படுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவை வலியுறுத்தின.

அமெரிக்க இராஜாங்க துணை செயலாளர் வென்டி ஆர். செர்மன், ஜப்பானிய வெளியுறவு துணை அமைச்சர் மோரி டெக்கியோவையும் கொரிய குடியரசு முதலாவது வெளியுறவு துணை அமைச்சர் சோய் ஜொங் குன்னையும் புதனன்று டோக்கியோவில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இராஜாங்க செயலாளரும் இரண்டு துணை வெளியுறவு அமைச்சர்களும் காலநிலை நெருக்கடிகள், நோய்தொற்று பெறுபேறு, பொருளாதார தாக்கம், மற்றும் அதனை மேம்படுத்தல் உள்ளிட்ட 21ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களுக்கு முகம்கொடுக்க  முத்தரப்பு ஒத்துழைப்பை பெறுவது பற்றியும் பேச்சு நடத்தினர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .