2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சீனாவில் வரலாறு காணாத மழை; 73 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 ஜூலை 28 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் அண்மைக்காலமாக வரலாறு காணாத கனமழை பெய்துவருகின்றது. குறிப்பாக கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவில் அதிக பட்ச மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இம்மழை வீழ்ச்சியினால்  ஹெனான் மாகாணத்திலுள்ள  ஜெங்ஜவ், ஜிங்ஜியாங், எனியாங் மற்றும் ஹெபி ஆகிய 4 நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  ஓராண்டுக்குப் பெய்ய வேண்டிய மழையானது 3 நாட்களில் பெய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இப் பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது 73 ஆக உயா்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 9,72,100 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் மற்றும்  24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .