2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்

Freelancer   / 2022 ஜனவரி 22 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் கியூஷூ தீவு பகுதியருகே இன்று அதிகாலை 1.08 மணியளவில் 6.4 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் 40 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ஜப்பானின் மியாஜகி, ஒய்டா, கொச்சி மற்றும் குமமோட்டோ ஆகிய மாகாணங்களில் 5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

இவற்றில் ஒய்டா மாகாணத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், மியாஜகி மாகாணத்தில் 4 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X