2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டிக் டொக்கின் விளைவால்...

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிக்டொக்கின் பாவனையால் சிறுமியொருவர் 23 காந்தங்களை விழுங்கிய சம்பவம் பிரித்தானியாவில்  இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுமி, டிக்டொக்கில் ஒரு சவாலை மேற்கொண்டுள்ள நிலையில் அதற்காக, 23 காந்தங்களை ஒரே சமயத்தில் விழுங்கியுள்ளார்.

இதனால், சிறுமி வயிற்றுவலி, குமட்டல் மற்றும் வாந்தியால் அவதிப்பட்டுள்ளார். எனவே,  சிறுமியின் பெற்றோர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தனர். அதன்பின்பு, வயிற்றிலிருந்த காந்தங்களை  அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். இருப்பினும் குடலுக்கு இடையில் காந்தங்கள் மாட்டிக் கொண்டதில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

சரியான நேரத்தில் சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லையெனில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தற்போது பல முயற்சிகளுக்குப் பின்பே சிறுமி நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .