2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

டுராண்ட் லைன் எல்லையில் பாகிஸ்தானின் தந்திரோபாயம்

Freelancer   / 2022 ஜனவரி 22 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லையில் வேலி அமைக்கவும், ஒரு தேசத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தவும் இஸ்லாமாபாத்துக்கு உரிமை இல்லை என்று தலிபானிய அரசாங்கம் கூறியதை அடுத்து, ஆப்கானிஸ்தானுடனான டுராண்ட் லைன் எல்லைப் பிரச்சனையில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை தந்திரோபாயமாக இடைநிறுத்தியுள்ளது.

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கிட்டத்தட்ட 2,600 கிலோமீற்றர் டுராண்ட் எல்லையில் எப்போதும் முரண்படுகின்றன.

குறிப்பாக எல்லை வழியாக இஸ்லாமாபாத் வேலிகளை அமைக்கத் தொடங்கியதிலிருந்து, அவர்களுக்கு இடையே பதற்றம் மற்றும் கொந்தளிப்புக்கு ஆதாரமாக இவ்விவகாரம் இருந்து வருகிறது.

டுராண்ட் லைன் வேலிகள் அமைக்கப்படக் கூடாது என்று தலிபான்கள் விரும்பும் அதே நேரத்தில் காபூலின் எதிர்ப்பையும் மீறி எல்லையின் பெரும்பகுதியில் வேலி அமைத்துள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

சிவப்பு முகம் கொண்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பிரச்சனையில் அதன் நிலைப்பாட்டை தந்திரோபாயமாக இடைநிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மேற்கு அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான உதவியை விரைந்து வழங்குமாறு பாகிஸ்தான் உலகிடம் கெஞ்சுகிறது என்று அல் அரேபியா போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய அரச ஊழியர் சர் ஹென்றி மோர்டிமர் டுராண்ட் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர் அப்துர் ரஹ்மான் கான் இடையே 1893 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட நூற்றாண்டு பழமையான பிரித்தானியர் கால எல்லை வரையறை இஸ்லாமாபாத் மற்றும் காபூலுக்கு இடையே நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .