2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

டெல்டாவுடன் போராடும் பைஸர், அஸ்ரஸெனக்கா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 22 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு தடைகள் பைஸர் அல்லது அஸரனெக்கா தடுப்புமருந்துகள் செலுத்தப்பட்டால், அவை அதிகம் பரவும் டெல்டா கொரோனா மாறிக்கெதிராக ஏறத்தாழ பயனுள்ளதாகக் காணப்படுகின்றன என நேற்று பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

முன்னதாக அல்பா மாறிக்கெதிராக இந்த தடுப்புமருந்துகள் பயனுள்ளதாக அமைந்தது போலவே தற்போதும் பயனுள்ளதாக இருக்கின்றன.

உலகளாவிய ரீதியில் தற்போது டெல்டா மாறியே ஆதிக்கம் செலுத்துகின்ற நிலையில் ஒரு தடுப்புமருந்தானது உயர் பாதுகாப்புக்கு காணாது என இவ்வாராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.

நியூ இங்லன்ட் மருத்துவ சஞ்சிகையில் வெளியான குறித்த ஆராய்ச்சியில் இரண்டு பைஸர் தடுப்பூசியானது 88 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்பா மாறிக்கெதிராக 93.7 சதவீதம் பயனுள்ளதாக இரண்டு பைஸர் தடுப்புமருந்துகள் காணப்பட்டிருந்தன.

அஸ்ரஸெனக்காவின் இரண்டு தடுப்புமருந்துகளானவை டெல்டா மாறிக்கெதிராக 67 சதவீதம் பயனுள்ளதாய் அமைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்பா மாறிக்கெதிராக 66 சதவீதம் பயனுள்ளதாக அஸ்ரஸெனக்கா காணப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X