2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தட்டுப்பாடுகளால் தள்ளாடும் பிரித்தானியா

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியதால் வெளிநாட்டவரை கனரக வாகனங்களின் சாரதிகளாக நியமிப்பதில் சிக்கல் நிலைமை  ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அந்நாட்டில்  ஒரு லட்சத்துக்கும் அதிகமான கனரக லொறிச் சாரதிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அங்கு பால், பெற்றோல், மருந்து, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி  நிலைமை காரணமாக இப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதையடுத்து பெற்றோல் நிரப்பு நிலையங்களில்  லொறிகளில் பெற்றோலை  எடுத்து செல்லும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்நிலையில் 10 நாட்களில்இந்நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .