2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தனது வீடியோவை வைரலாக்க தகாத செயலில் ஈடுபட்ட இளைஞர் (வீடியோ)

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் உள்ள  Rhode Island என்ற பகுதியில் வசித்து வரும் ஜுமன்னே வே (Jumanne Way )என்ற இளைஞர் தனது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காக உணவகம் ஒன்றில் செய்த மோசமான செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 உணவகமொன்றில் பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் அவ்வுணவகத்தின் கழிவறை கோப்பை ஒன்றின் மீது காய்கறிகள் மற்றும் இறைச்சி உள்ளிட்டவற்றை பரப்பியும்,    உணவு பொருள்களை வரிசையாக அடுக்கி அதன் மீது கால் வைத்து மிதித்து விட்டு அதனை மீண்டும் எடுத்த இடத்திலேயே அடுக்கி வைத்தும் , ஜூஸ் போத்தல்களை திறந்து குடித்து விட்டு மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது போன்ற மோசமான செயல்களைச் செய்து வீடியோவாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

 மேலும் இச் செயல்களால் தனக்கு தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை நான் எடுக்கும் வீடியோ இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு அதனால் கிடைக்கும் பணம் தான் எனக்கு முக்கியம் என்று கூறியுள்ளார்.

பின்னர் அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியானதையடுத்து குறித்த உணவகத்தில் இருந்து அந்த இளைஞர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .