2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 01 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாகக்  குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாகக்  குழந்தை பிறப்பு விகிதமானது தொடர்ந்து சரிவடைந்து கொண்டு செல்கின்றது.

குறிப்பாக  பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டு செல்வதால் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் மக்கள் தொகை சரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை அண்மைக் காலமாக  எடுத்து வருகின்றது.

அந்த வகையில் சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள மாகாண அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் குழந்தைப் பெற்று கொள்வதில் திருமணமான தம்பதிகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுவந்த  சலுகைகள், மானியங்கள் போன்றவை இனி திருமணமாகாத தம்பதிகளுக்கும்  வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய விதிமுறைகள் வருகிற 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், திருமணமானவர்கள் மற்றும் ஆகாதவர்கள் எவ்வளவு குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .