2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தலிபான்களால் இழக்கப்படும் ஊடக சுதந்திரம்

Freelancer   / 2022 ஜனவரி 24 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானை கடந்த வருடம் ஓகஸ்ட் நடுப்பகுதியில் தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டில், ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களது சுதந்திரத்தை இழந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்துவிட்டதாகவும், அவர்கள் காபூலில் உள்ள நடைமுறை அதிகாரிகளால் முறையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் காமா பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தணிக்கைக்கு வெவ்வேறு வேர்கள் உள்ளன என்றும் பெரும்பாலான வேர்கள் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டுக்கு சொந்தமானவை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கான் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டின் உளவுத்துறையால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

ஊடகங்களை தங்கள் பிரச்சார தளங்களாக மாற்ற உளவுத்துறை விரும்புகிறது எனவும் அவர்களது அச்சுறுத்தல், சக்தி, மற்றும் அழுத்தங்கள் காரணமாக உளவுத்துறை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்றும் காமா பிரஸ் அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளது.

தலிபான்கள், ஊடகங்களின் செய்தி அறைகளுக்குச் சென்று பத்திரிக்கையாளர்களிடம் தமது ஆட்சியின் கீழ் வாழ்வதால் தமக்குச் சாதகமாக செய்திகளை வெளியிடச் சொல்கிறார்கள் என்று பேச்சு சுதந்திரத்தின் முகப்பு கூறியதாக காமா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தலிபான்களின் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்படுவதை விரும்பாததால், பெரும்பாலான முக்கிய ஊடகவியலாளர்கள் வேலையை விட்டு விலகியுள்ளனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X