2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

துனீஷியாவில் நெருக்கடியில் ஜனநாயகம்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 26 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

துனீஷியாவானது கடந்த பத்தாண்டில் அதன் மிகப் பெரிய ஜனநாயக நெருக்கடி ஒன்றை இன்று எதிர்கொள்கின்றது.

அரசாங்கத்தை ஜனாதிபதி கை சயீட் கலைத்ததுடன், பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை முடக்கியதையடுத்தே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நகர்வை ஆட்சிக் கவிழ்ப்பு என அடையாளப்படுத்தியுள்ள ஜனாதிபதி சயீட்டின் எதிராளிகள், இது வீதியில் எதிர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

நேற்றிரவு அரசமைப்பின்படி பிரதமர் ஹிசெம் மெஷிசியை அகற்றியதுடன், உத்தரவு ஒன்றின்படி பாராளுமன்றத்தை 30 நாள்கள் முடக்கியதுடன், புதிய பிரதமருடன் தான் ஆட்சி செய்வேன் என அறிக்கை ஒன்றில் ஜனாதிபதி சயீட் வெளிப்படுத்தியிருந்தார்.

அரசாங்கத்துக்கும், பாராளுமன்றத்திலுள்ள மிகப் பெரிய கட்சியான இஸ்லாமிய என்னஹ்டா கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடுத்தே இந்நகர்வு இடம்பெற்றிருந்தது.

கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு, அரசியல் பிறழ்ச்சி, பொருளாதார் வீழ்ச்சியாலேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், ஜனாதிபதி சயீட்டின் அறிவிப்பையடுத்து அவருக்கு ஆதரவாக தலைநகர் துனிஸிலும், ஏனைய நகரங்களிலும் பாரிய சனத்திரள்கள் கூடியிருந்தன.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவமானது பாராளுமன்றத்தையும், அரச தொலைக்காட்சியையும் முடக்கியிருந்தது.

இதேவேளை, நேற்று அதிகாலையில் சபாநாயகரான என்னஹ்டா கட்சியின் தலைவரான றஷெட் கன்னெளச்சி பாராளுமன்றத்துக்கு சென்று அமர்வொன்றை அழைப்பேன் எனத் தெரிவித்த நிலையில், அவரை இராணுவம் தடுத்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X