2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துப்பாக்கி முனையில் மக்களைத் தண்டிக்கும் சீனப் பொலிஸார்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய 4 பேரை பொலிஸார் துப்பாக்கி முனையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று தண்டித்த  சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலுள்ள jingxi என்னும் பகுதியில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாத் தொற்றைக்  கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரிகள் மிகக்கடுமையான விதிமுறைகளை அங்கு பின்பற்றி வருகிறனர்.

இந்நிலையில் குறித்த நகரில் கொரோனா விதிமுறைகளை மீறிய 4 பேரை பொலிஸார் அவர்களது புகைப்படம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்த வைத்து வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டே  சீனாவில் குற்றவாளிகளை பொது இடங்களில் வைத்து அவமதிக்கும் செயல்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் இவ்வாறு செய்தமை அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X