2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற நேபாள பிரதமர்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 18 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாள பாராளுமன்றத்தின் நம்பிக்கையை அந்நாட்டின் புதிய பிரதமர் ஷேர் பகதுர் டெயுபா பெற்றுள்ளார்.

அந்தவகையில், அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் அதிகாரத்தில் டெயுபா தொடரவுள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தின் கீழ்ச் சபையில் 165 வாக்குகள் பிரதமர் டெயுபாவுக்கு ஆதரவாகக் கிடைத்ததாகவும், 83 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததாகவும் சபாநாயகர் அக்னி சப்கொடா அறிவித்துள்ளார்.

சீனாவுடனான உறவுகளை முன்னாள் பிரதமர் கஹட்கா பிரசாத் ஒளி விரும்பியிருந்த நிலையில், இந்தியாவுக்கு அருகில் நேபாளத்தை பிரதமர் டெயுபா கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .