2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிதானத்தைக் கடைபிடிக்குமாறு சீனாவுக்கு ஜப்பான் அறிவுரை

Editorial   / 2021 நவம்பர் 15 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

டோக்கியோ [ஜப்பான்],
 

தியோயுடாய் தீவு அருகே ராணுவ நடவடிக்கைகளில் நிதானத்தைக் கடைபிடிக்குமாறு சீனாவை ஜப்பான் கேட்டுள்ளது 

கிழக்கு சீனக் கடலில் "அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகளில்" சுய நிதானத்தைக் கடைபிடிக்குமாறு  சீனாவை ஜப்பான் கேட்டுக் கொண்டுள்ளதாக தைவான் செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி, தைவான் நியூஸ் நிறுவனம், சீனக் கப்பல்கள் டயோயுடாய் தீவுகளைச் சுற்றியுள்ள கடலுக்குள் அடிக்கடி நுழைவது குறித்து சிரேஷ்ட ஜப்பானிய இராஜதந்திரி ஃபுனகோஷி டேகிரோ கவலை தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளது.

தைவான் செய்திகளின்படி, தியோயுடாய் தீவுகள் ஜப்பானால் நிர்வகிக்கப்படுகின்றன, எனினும் அவை சீனா மற்றும் தைவான் போன்ற நாடுகளால் உரிமை கோரப்படுகின்றன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீன வெளியுறவு அமைச்சின்  எல்லை மற்றும் சமுத்திர விவகாரத் துறைகளுக்குப் பொறுப்பான நிர்வாக இயக்குநர் ஹாங் லியாங், ஃபுனாகோஷியிடம், "நிலைமையை சிக்கலாக்கும் நடவடிக்கையை ஜப்பான் தவிர்க்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார் என்று அமைச்சு கூறுகிறது.

கடந்த மாதம் ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்ற பிறகு ஃபுனாகோஷியும் ஹாங்கும் ஒருவரையொருவர்  மெய்நிகர் வழியாக சந்தித்து உரையாடியது இதுவே முதல் தடவையாகும்.

"அமைதி மற்றும் சர்வதேச சமூகத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச ஒழுங்கு குறித்த உலகளாவிய சவால்களை நாங்கள் காண்கிறோம்," என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்ற யோஷிமாசா ஹயாஷி தனது முதல் செய்தியாளர் சத்திப்பின் போது கூறினார். அத்தோடு, சீனாவின் இராணுவ ஆக்கிரமிப்பால் எழும் பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் நாட்டின் அமைதி மற்றும் செழுமையையும் பாதுகாக்கவும் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அண்டை நாடுகளுடன் ஆக்கபூர்வமான உறவுகளை கட்டியெழுப்பும் பணி குறித்தும் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அமைச்சர்  உறுதியளித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .