2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நேபாள பிரதமராகப் பதவியேற்ற ஷேர் பஹதுர் டெயுபா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 14 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான ஷேர் பஹதுர் டெயுபா பிரதமராக நேற்று பதவியேற்றுள்ளார்.

அந்தவகையில், ஐந்தாவது தடவையாக 74 வயதான டெயுபா பதவியேற்றுள்ளார்.

275 பேரைக் கொண்டுள்ள நேபாள பாராளுமன்ற கீழ்ச்சபையில் 149 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக டெயுபா தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்துக்கிடையில் கீழ்ச் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் டெயுபா வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு போதும் தனது பதவிக் காலத்தை முழுமையாக டெயுபா பூர்த்தி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், இம்முறையிலும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் வரையிலேயே டெயுபா பதவி வகிக்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X