2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாட்டியின் கல்லறையில் இருந்த வார்த்தையால் அதிர்ச்சியடைந்த யுவதி

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது பாட்டியின் கல்லறையை முதல் முதலாக பார்த்த பெண் ஒருவர், அதில் இருந்த வாசகம் ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்த  சம்பவம், பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து அப் பெண் கருத்துத் தெரிவிக்கையில் ”எனது பாட்டி தன்னுடைய 40 வயதில் உயிரிழந்தார். அப்பொழுது எனது தாய்க்கு சுமார் 20 வயது இருந்தது. எனது பாட்டி இறந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நான் பிறந்தேன்.

தன்னுடைய தாயின் இழப்பு தன்னை மிகவும் பாதித்திருந்ததால், அவரின் கல்லறைக்கு எனது தாய் ஒரு முறை கூட சென்றதில்லை. தாய் செல்லாததன் காரணமாக என்னுடைய பாட்டியின் கல்லறை எங்கு இருப்பது என்பது கூட எனக்கு தெரியாமல் இருந்தது.


இந்நிலையில் என்னுடைய பாட்டி இறந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு, விடுமுறைக்கு வேல்ஸ் பகுதிக்கு வந்திருந்த நான், பாட்டியின் கல்லறைக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

இதனையடுத்து எனது பாட்டியின் கல்லறையை போய் பார்த்த போது  குறித்த கல்லறை பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தைப்  பார்த்து ஒரு நிமிடம் நான் அதிர்ந்து போனேன்.

ஏனெனில் அதில் 'அதிகம் அன்புள்ள பாட்டி' (a dotting grandmother) என்று இருப்பதற்கு பதிலாக, அதில் அவர் ஒரு 'தத்தெடுக்கப்பட்ட பாட்டி' (adopting grandmother) என்ற எழுத்து பிழை இருந்தது. கடந்த 30 வருடமாக, ஒருவர் கூட இதனை கவனிக்கவில்லை என்பதை நினைத்து நான் மிகவும் மன வேதனை அடைந்தேன்" என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இதனை சரி செய்யலாமா அல்லது அப்படியே விட்டு விடலாமா என்றும் தன்னுடைய சமூக வலைதளத்தில் அந்த பெண் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X