2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

’புடின் வருகை இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை பாதிக்காது’

Freelancer   / 2025 டிசெம்பர் 07 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இரண்டு நாள் இந்திய விஜயம், நடந்து வரும் இந்தியா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கும் என்ற கருத்தில் உடன்படவில்லை என வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதியாக தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர்,

புடினின் வருகை இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை பாதிக்கும் என்ற கருத்தில் நான் உடன்படவில்லை. உலகின் அனைத்து முக்கிய நாடுகளுடனும் இந்தியா நல்ல உறவுகளைக் கொண்டுள்ளது. மற்ற நாடுகளுடன் நமது உறவுகளை எவ்வாறு வளர்த்துக் கொள்கிறோம் என்பதை எந்த நாடும் எதிர்பார்ப்பது ஒரு நியாயமான விஷயம் அல்ல. ஏனென்றால் நினைவில் கொள்ளுங்கள், மற்ற நாடுகளும் அதையே உங்களிடம் எதிர்பார்க்கலாம்.

எங்களுக்கு பல நாடுகளுடன் உறவுகள் உள்ளன, எங்களுக்கு தேர்வு சுதந்திரம் உள்ளது. மேலும் நாங்கள் மூலோபாய சுயாட்சி பற்றி பேசுகிறோம் என்பதை எப்போதும் தெளிவுபடுத்தியுள்ளோம், அது தொடர்கிறது.

அமெரிக்காவில் ஒவ்வொரு அரசாங்கமும் ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் உலகை அணுகுவதற்கு ஒரு அணுகுமுறையை கொண்டுள்ளனர். அதிபர் ட்ரம்ப்பின் விஷயத்தில், முன்பு இருந்தவர்களை விடவும் அவரின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டது என்பதை நான் உங்களிடம் ஒப்புக்கொள்ள முடியும்.

இப்போது எங்களுடைய உறவில் முடங்கிப்போன பல சிக்கல்கள் உள்ளன. சிக்கல்களை சரிசெய்ய முயற்சிக்கிறோம். எங்கள் வர்த்தக நலன்களை மேம்படுத்தும் ஒரு புள்ளி இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடரும்போது இந்தியாவின் முக்கிய பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் மிகவும் விவேகத்துடன் செயல்படுகிறோம். இந்த காலண்டர் ஆண்டிற்குள் ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X