2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புடினின் ஆயுட்காலம் இன்னும் 2 ஆண்டுகள் தானா?

Ilango Bharathy   / 2022 ஜூலை 03 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புடின்,  இரத்தப் புற்று நோய் உள்ளிட்ட ஒரு சில நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இரண்டு வருடங்களில் புடின் இறந்து விடுவார் என உக்ரேனின்  உளவுத்துறை தலைவர்  மேஜர் ஜெனரல்  ஜியோரிலோ ஓ. புதனோவ்( kyrylo o.Budanov) தெரிவித்துள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிரபல ஊடகமொன்றுக்கு அவர் அளித்த செவ்வியில் ”ரஷ்ய ஜனாதிபதி புடின் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை . அவர் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மிக மோசமாகப்  பாதிக்கப்பட்டுள்ளார்.  அத்துடன் மிக மோசமாக நோய்வாய்ப்பட்டுள்ளார். எனவே எப்போது வேண்டுமானாலும் அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் புடின்  பார்க்கின்சன் முதலான பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் அக் கூற்றுக்கு ஆதாரம் எதுவும் இருப்பதாகத்  தெரியவில்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .