2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பயோடேட்டா பேஸ் தயாரிக்கும் சீனாவின் முயற்சிக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Editorial   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வோஷிங்டன்(யுஎஸ்):

சீனாவிலுள்ள நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய உயிர் மரபணு தரவு தளத்தை உருவாக்கும் முயற்சியில் உலகெங்கும் மரபணு தகவல்களை சேகரித்து வருகின்றன என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய எதிர் நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு மையம் என்பவற்றை மேற்கோள்காட்டி உயிரியல் பொருளாதாரம் தொடர்பான அனைத்து தொழில் நுட்பங்களையும் பாதுகாக்கவேண்டிய தேவை உள்ளதென்று அந்தச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 சீனாவும் மற்ற நாடுகளும் இந்த தொழில்நுட்பங்களில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றன. அத்துடன் சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத வழிகளையும் பயன்படுத்துகின்றன  என்று எதிர் புலனாய்வு மையத்தின் இயக்குனர் மைக்கல் ஓர்லாண்டோவை மேற்கோள் காட்டி அச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

உயிரியல் பொருளாதார தொழில்நுட்பத்தைப்பற்றி (பயோஎக்கனொமிக் டெக்னொலொஜி) விவரிக்கையில் அச்செய்தி தெரிவிப்பதாவது ஏஐ மற்றும் இயந்திரக் கற்றலானது இராணுவ நடவடிக்கைகளில் புரட்சிசெய்யும் திறனைக்கொண்டுள்ளது. இது தவிர குவாண்டம் கொம்ப்யூட்டிங் உலகில் இதுவரை இருக்கும் வலுவான குறியாக்கத்தை கடத்த உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

வளர்ந்துவரும் மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களுக்கான தேசிய எதிர் புலனாய்வு அதிகாரி எட்வர்ட் யூ, சீனா உலகெங்கிலும் உள்ள மருத்துவ மற்றும் சுகாதார தகவல்களை குவித்துள்ளதென்று கூறியதாக நியூயோர்க் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. சீனாவிலுள்ள சிறுபான்மை இனத்தவர்களான உய்குர் முஸ்லிம்கள்மீதான   மரபணு சோதனைகள் மரபணு தகவல்களை தவறாகப் பயன்படுத்திய வரலாறும் சீனாவுக்கு உண்டு என்று  எட்வர்ட் யூ, மேலும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் உலகின் மிகப்பெரிய உயிரியல் மரபணு தகவல்களை அபிவிருத்தி செய்து வருகின்றனர். அமரிக்க தொழில் நுட்பத்தைத் திருடும் சீனாவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு எதிராக ஃபெடரல்பியூரோ ஓஃப் இன்வெஸ்டிகேஷன் மற்றும் எதிர் புலனாய்வு மையம், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கபபடுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X