2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பரிஸில் ஸ்கூட்டரில் மில்லியன்கள் திருட்டு

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 28 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் ரக நகைக் கடை ஒன்றில் இருந்து இரண்டு மில்லியன்கள் யூரோக்களுக்கும் அதிகமான பெறுமதியான ஆபகரணங்கள், விலைமதிப்பற்ற கற்களைத் திருடிய நபர் ஒருவரை பிரெஞ்சுத் தலைநகர் பரிஸிலுள்ள பொலிஸார் தேடி வருகின்றனர்.

50 அல்லது 60 வயதுகளுடைய குறித்த நபர் நிற்கும் ஸ்கூட்டர் ஒன்றிலியே நேற்றுப் பிற்பகலில் கடைக்கு வந்துள்ளார். பின்னர் ஆயுதம் ஒன்றை எடுத்து, கடையில் வைத்ததாகக் கூறிய குண்டு ஒன்றை வெடிக்க வைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பணியாளர்களை ஆபரணங்களையும், கற்களையும், கடையின் அனைத்துத் திறப்புகளையும் கையளிக்குமாறு வலியுறுத்திய குறித்த நபர், பணியாளர்களைப் பூட்டி விட்டு சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .