2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாகிஸ்தானில் 4ஆவது அலை: ஒக்சிசன் பற்றாக்குறை

Editorial   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கராச்சி:

பாகிஸ்தானில் கொவிட்-19 நான்காவது  அலைக்கு மத்தியில் ஒக்சிசன் பற்றாக்குறைக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளுர் பத்திரிகையொன்று தெரிவித்தது.

பாகிஸ்தானின் ஒக்சிசன் உற்பத்தி நிறுவனமான  பாகிஸ்தான் ஒக்சிசன் லிமிடெட் (PLO)  மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் அதிகரித்துவரும் ஒக்சிசன் தேவைக்கு தம்மால் முகம்கொடுக்க முடியாத அதன் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஒக்சிசன் நிறுவனம் அதன் கிளை நிறுவனங்களை கராச்சியிலும் லாகூரிலும் நடத்திய போதிலும் தேவையை பூர்த்திசெய்ய முடியாமலிருக்கிறது. இது எங்களின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் உள்ள ஒரு நிலைமை. இதற்கு முகம்கொடுப்பதில் நாங்கள் எங்கள் திறனையும்,சக்தியையும் பயன்படுத்துகிறோம் என்று அந்த நிறுவனம் அந்தக்கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளதுடன் மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமாறும் மருத்துவமனைகளைக் கோரியுள்ளது.

எந்த மருத்துவமனையினதும் அவசரசேவைக்கும் எங்களால் இயன்றதை நாங்கள் செய்யும் நிலையில் முழுமையான திறனுடன் போராடியும் அதிகரிக்கும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலிருக்கும் நிலையை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் என்றும் அந்த நிறுவனம் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .