2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானை காப்பாற்றுங்கள்

Editorial   / 2021 நவம்பர் 23 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமாபாத்(பாகிஸ்தான்)

விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்பான நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் எதிர்க்கட்சி கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் ( PDM)  இம்ரான்கான் அரசை கடுமையாக  விமர்சிக்கும் கூட்டமொன்றை நடத்தியது. அதில் சட்டவிரோத மற்றும் திறமையற்ற ஆட்சியாளர்களிடமிருந்து மக்களைக்காப்பாற்ற  திடீர் தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரியது.

பி.டி.எம். மற்றும் ஜமியத் உலேமா -இ- இஸ்லாம்  தலைவர் மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் சனியன்று கூறுகையில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப் (PTI)  அரசாங்கத்தின் திறமையின்மையால் பாகிஸ்தானின் உயிர் வாழ்வே ஆபத்தில் உள்ளது என்று கூறியதாக த எக்ஸ்பிரஸ் டிரிபியூன் அறிவித்தது.

பிஎம்எல் - என்னின் (பாகிஸ்தான் முஸ்லீம் லீக்) சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் பிரதம மந்திரியுமான சாஹிட் ககான் அபாசியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். திடீர் மற்றும் உடனடி தேர்தலே  நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரே வழி என்று அவர் கூறினார.;

இம்ரான்கான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன என்று கூறிய பிடிஎம் தலைவர் நாட்டின் வாழ்வுக்காகப் போராடுவதாகவும் இந்தப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.

கராச்சியில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பேசுகையில் பிடிஎம் மற்றும் ஜூய் - எஃப் தலைவர் பஸ்லுர் ரெஹ்மான்  நாங்கள் இந்த யுத்தத்தில் வெல்வோம். பாகிஸ்தான், மக்களின் உண்மையான பிரதிநிதியான ஓர் அரசை கொண்டுவரும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் உண்மையான மக்களின் பிரதிநிதி ஒருவர் நிச்சயம் தெரிவு செய்யப்படுவார் என்று கூறினார.;

அரசியல்வாதிகளே நாட்டின் நம்பிக்கை. இன்று நாம் நமது பங்களிப்பை வழங்காவிட்டால் நாடு நம்மை மன்னிக்காது. மனசாட்சி தவறுகளை மதிப்பாய்வு செய்து நாட்டிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என்று ரெஹ்மான் மேலும் கூறியதாக ஜிஇஓ செய்திநிறுவனம் தெரிவித்தது.

இம்ரான்கான் அரசாங்கத்தை அதன் திறமையின்மைக்காக சாடிய ரெஹ்மான் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப்  அரசாங்கத்தை அகற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பதாகவும் உறுதியளித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .