2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிரமாண்ட பொம்மையின் நடைபயணம்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய பதினொரு அடி (3.5 மீற்றர்) உயரமுள்ள லிட்டில் அமல்( Little Amal ) என்ற மரத்தினால் ஆன பிரம்மாண்ட பொம்மையொன்று கடந்த 28 ஆம் திகதி  சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரை  வந்தடைந்தது.

 சிரிய அகதியைப் போன்ற தோற்றமுடைய இப்பொம்மையானது உலகம் முழுவதும் வாழும் அகதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, 8,000 கிலோ மீற்றர் நடைபயணத்தை  மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெனிவாவிலுள்ள அகதிகள் சங்கம் சார்பில் லிட்டில் அமலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னிருந்து இயக்கும் 4 கலைஞர்கள் இப்பொம்மையை நடக்க வைப்பதோடு, உயிரோட்டமாக முகபாவங்களை வெளிப்படுத்தச் செய்கின்றனர் எனக் கூறப்படுகின்றது.

பிரித்தானியாவின் குட் சாண்ஸ் (Good Chance) என்ற தொண்டு நிறுவனம்  இந்நடை பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .