2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரேஸில் ஜனாதிபதியின் காணொளிகளை அகற்றிய யூடியூப்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 22 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸில் ஜனாதிபதி ஜைர் பொல்ஸ்னரோவின் காணொளிகளை, கொரோனா பரவல் தொடர்பாக தவறான தகவலைப் பரப்பிதற்காக அகற்றியுள்ளதாக யூடியூப் நேற்று தெரிவித்துள்ளது.

மீளாய்வையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்த யூடியோ, ஜனாதிபதி பொல்ஸ்னரோவின் பதவியோ அல்லது அரசியல் கொள்கையோ கருத்திற் கொள்ளப்படவில்லை எனக் கூறியுள்ளது.

முடக்கங்களுக்கு எதிர்ப்பு, நிரூபிக்கப்படாத குணமடைதல் வழிமுறைகள், தடுப்புமருந்துகளில் சந்தேகம், முகக்கவசங்களை அணியாமை காரணமாக பரந்தளவிலான விமர்சனத்தை தீவிர வலதுசாரிக் கொள்கைகளையுடைய ஜனாதிபதி பொல்ஸ்னரோ எதிர்கொண்டிருந்தார்.

கடந்தாண்டு டுவிட்டரும், பேஸ்புக்கும் ஜனாதிபதி பொல்ஸ்னரோவின் காணொளிகளை அகற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X