2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பொலிஸ் அதிகாரி கொலை: பாகிஸ்தான் தலிபான்கள் பொறுப்பேற்பு

Freelancer   / 2022 ஜனவரி 23 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமாபாத்தில் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு தடைசெய்யப்பட்ட பாகிஸ்தானிய தலிபான்கள்  பொறுப்பேற்றுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில், ஒரு அதிகாரி கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்தனர்.

நகரின் பரபரப்பான சந்தை ஒன்றின் அருகே உள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடியின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள், கடந்த திங்களன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் தாக்குதல் நடத்திய இருவரையும் கொன்றதாக பொலிஸார் தெரிவித்தனர் என்று வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமட், துப்பாக்கிச் சூடு தாக்குதல் பயங்கரவாத செயல் என்று கண்டனம் தெரிவித்ததாக வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பாக டிசெம்பர் மாத ஆரம்பத்தில் தலிபானுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட 30 நாள் போர் நிறுத்தம் காலாவதியானதையடுத்து, தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பினர் பாகிஸ்தானில் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்கும் முயற்சியில் போர் நிறுத்த இடைத்தரகராக செயற்பட்டுள்ளது.
 
எனினும், பாகிஸ்தான் தலிபான்கள், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததை காரணம் காட்டி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்ததாக வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .