2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மத்திய வலதுசாரிக் கட்சியில் பொல்ஸ்னரோ

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 09 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜைர் பொல்ஸ்னரோ, மத்திய வலதுசாரி லிபரல் கட்சியுடன் இணைந்து கொள்வார் என அக்கட்சியின் தலைவர் வல்டெமர் கொஸ்டா நெட்டோ நேற்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதை உறுதிப்ப்படுத்தியுள்ள ஜனாதிபதி பொல்ஸ்னரோ, இவ்வாரம் இது இடம்பெறலாம் எனக் கூறியுள்ளார்.

முன்னாள் இடதுசாரி ஜனாதிபதியான லூலா டா சில்வாவை அடுத்தாண்டு ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி பொல்ஸ்னரோ எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகையில், அதற்கான முதல் நகர்வாக இது பார்க்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், ஜனாதிபதி பொல்ஸ்னரோவோ அல்லது முன்னாள் ஜனாதிபதி லுலாவோ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .