2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மின்வெட்டால் தள்ளாடும் சீனா

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அமுலில் இருப்பதாகவும்,  இதனால் நிறுவனங்களின் உற்பத்திகள் குறைவடைந்து அந்நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளில் பகல் நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இரவு நேரங்களில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 சீனாவில் உள்ள அனைத்து மாகாணங்களும் மின்சாரம் இல்லாமல் முடங்கிப் போவதைத் தவிர்க்க, 16 மாகாணங்களில் சுழற்சி முறையில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதைச்  சரி செய்ய சீனா பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை சீனாவில் மின்வெட்டு பிரச்னை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .