2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முட்டை இல்லாத முட்டை ; அறிமுகப்படுத்தும் நெஸ்லே

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாவரங்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படும் முட்டைகளையும் இறால்களையும் பிரபல உணவுப் பொருள்  உற்பத்தி நிறுவனமான நெஸ்லே( Nestle )அறிமுகம் செய்யவுள்ளது.

வேகன் (Vegan ) எனப்படும் இறைச்சியோ விலங்குகளிலிருந்து எடுக்கப்பட்ட எந்த பொருளுமோ சேர்க்கப்படாத உணவுவகைகளுக்கான தேவை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த நிறுவனம்  தயாரித்துள்ள தாவரப் பொருள்களை உள்ளடக்கிய முட்டையில், சோயா புரதங்களும், omega-3 ஊட்டச்சத்தும் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அத்துடன் முட்டை, Garden Gourmet vEGGie எனும் பெயரிலும் இறால், Vrimp எனும் பெயரிலும் ஐரோப்பாவில் முதலில் விற்பனைக்குவரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .