2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலிடத்தைப் பிடித்த ஐக்கிய அரபு இராச்சியம்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டினைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு இராச்சியம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அந்நாட்டின் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்கள் 152 நாடுகளுக்குச் சில சலுகைகளுடன் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 98 நாடுகளுக்கு விசா இல்லாமலும், 54 நாடுகளுக்கு அங்கு சென்ற பின் விசா கொடுப்பதும், 46 நாடுகளுக்கு நுழைவதற்கு முன்பு விசா என்ற வசதியும் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில்,  நியூசிலாந்தின் கடவுச்சீட்டு உள்ளதோடு  இதன் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்கள் 146 நாடுகளுக்குச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மூன்றாவது இடத்தில், ஜேர்மனி, பின்லாந்து, ஒஸ்திரியா, லக்சம்பர்க், ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென் கொரியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.

இதே போன்று உலகிலே மிகவும் வலிமை குறைந்த கடவுச்சீட்டாக ஆப்கானிஸ்தானின் கடவுச் சீட்டு  உள்ளது. இதைத் தொடர்ந்து, ஈராக், சிரியா, பாகிஸ்தான், சோமாலியா, ஏமன், மியான்மார் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்கள்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .