2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முன்னாள் நீதிபதியின் குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் மறுப்பு

Ilango Bharathy   / 2021 ஜூன் 15 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற (ஐ.எச்.சி) நீதிபதி சவுகத் அஸீஸ் சித்திக்கின் நீதித்துறை தொடர்பான குற்றச்சாட்டுக்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

ராவல்பிண்டியில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கக் கூட்டத்தில் நாட்டின் நிறுவனங்கள் நீதித்துறையில் தலையிடுவதாக சித்திக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையில் ஜனாதிபதி ஆரிப் அல்வி அதே வருடம் அவரைப் பதவி நீக்கம் செய்தார்.

கடந்த வியாழனன்று மேலதிக அட்டோர்னி ஜெனரல் சொஹெய்ல் மஹ்மூத் உச்சநீதிமன்றத்தில் ஒருபக்க அறிக்கையொன்றை சமர்ப்பித்தார். அவ்வறிக்கையில் சில குறிப்பிட்ட அதிகாரிகள் பற்றி குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு அவை நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்டன. அவை அடிப்படையற்றதும் தவறாக வழிநடத்துபவை என்றும் கூறி அது நிராகரிக்கப்பட்டது.

சித்திக் ஏற்கனவே பனாமாகேட் விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்த சிரேஷ்ட ஐஎஸ்ஐ அதிகாரிகள் தன் வீட்டுக்கு வந்திருந்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்திலேயே முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் குற்றம்சாட்டப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .