2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முஸ்லீம் என்பதால் பதவியை பறித்துவிட்டார்கள்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 25 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ முஸ்லீம் என்பதால் பதவியை பறித்துவிட்டார்கள் “என பிரித்தானியாவின் ஆளும் கட்சியான, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த  பெண் பாராளுமன்ற உறுப்பினரான நுஸ்ரத் கனி (Nusrat Ghani ) என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ” கடந்த 2018 ஆம் வருடத்தில் முன்னாள் பிரதமர் தெரசா மே பதவியில் இருந்த போது, போக்குவரத்து துறைக்கான இணை அமைச்சராக இருந்தேன். அதன்பிறகு கடந்த 2020 ஆம் வருடம் பெப்ரவரி மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவியேற்றவுடன் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது.

அப்போது என் பதவியை பறித்துவிட்டனர். அதற்கு பிறகு நடைபெற்ற கூட்டத்தில் கட்சி கொறடாவிடம் இதுபற்றி விளக்கம் கேட்டேன். அவர், அமைச்சரவை மாற்றப்பட்டதற்கான உயர்மட்டக் கூட்டத்தில் நான் முஸ்லிம் என்பது ஒரு காரணமாக கூறப்பட்டதாக தெரிவித்தார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதனால் கட்சியின் மீதுள்ள நம்பிக்கையை இழந்து விட்டேன். இப்பிரச்சனையை வெளியில் கூறினால், என் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உண்டாகும் என்பதால் தான் இதனை கூறவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் அவரது குற்றச்சாட்டானது  பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .