2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லஷ்கர்-இ-தொய்பாவை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது

Editorial   / 2021 நவம்பர் 28 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                            

புதுடெல்லி(ஏஎன்ஐ):

பாகிஸ்தானை தளமாகக் கொண்டதும்>  சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புமான லஷ்கர்-இ-தொய்பா(LeT)ஆப்கன்-பாக். எல்லையில் அமைந்திருக்கும் கைபர் பக்துன்காவாவிலும்  மற்றும் ஆப்கானிஸ்தானிலும் புதிய முகாம்களை அமைத்துள்ளது, அங்கு பயங்கரவாதிகளுக்கு ஆட்சேர்ப்பதுடன் மற்றும் பயிற்சிகளை தடையின்றி தொடர்கிறது என்று டெய்லி சீக்(DailySikh) பத்திரிகை தெரிவித்துள்ளது.

அச்செய்தியின்படி அமைப்புக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராக செயல்படுவதாக பாகிஸ்தானின் கூற்றுக்கள் இருந்தபோதிலும் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றும்  ஹக்கானி வலையமைப்பு மற்றும் கொரசானுக்கான இஸ்லாமிய அரசு (ISIS-K) போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் கூட்டணி அமைத்து அதன் தளத்தை விரிவுபடுத்தியுள்ளது என்றும் தெரிகிறது.

முன்னதாக, 2008 மும்பை தாக்குதலில் லஷ்கர்> தொய்பா ஈடுபட்டது. அதனையடுத்து அந்த அமைப்பு மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் மீது  சர்வதேச அழுத்தம் இருந்தது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இராணுவ சக்தியை பலப்படுத்துவதற்கு அங்கு தளங்களை அமைக்க லஷ்கர்>  தொய்பா தலைமையை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என்பதிலிருந்து லஷ்கர்> தொய்பாவின் விரிவடையும் தளத்தை புரிந்து கொள்ள முடியும். தலிபான் வெற்றியில் லஷ்கர்> தொய்பாவின் பங்கு குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் லஷ்கர்> தொய்பாவின் தளம் விரிவடைவதையும்> ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கையகப்படுத்தியதையும் தனித்தனியாகப் பார்க்க முடியாது> ஏனெனில் இஸ்லாமாபாத் இரண்டையும் எளிதாக்கியுள்ளது என்று டெய்லி சீக் மேலும் தெரிவித்துள்ளது.

முன்னதாக> மே 2018 இல் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்புக் குழு> பாகிஸ்தானுக்குள் உள்ள மதரஸாக்களின் வலையமைப்பிலிருந்து லஷ்கர் இ தொய்பா ஆட்சேர்ப்பை எளிதாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்> குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் அது

நடத்தும் பயிற்சி முகாம்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றதாகவும் சுட்டிக்காட்டியது.

மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் லஷ்கர்> தொய்பா வளர்ச்சி சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் தனித்துவமானது.

மும்பை தாக்குதலுக்குப் பிறகு தலை துண்டிக்கப்படுதலுக்குப் பதிலாக> பாகிஸ்தான் இராணுவத்தின் உதவியுடன் லஷ்கர்>  தொய்பா உலகின் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாக மாறியுள்ளது என்று டெய்லி சீக் தெரிவித்துள்ளது. 

காபூலை தலிபான்கள் கைப்பற்றுவதற்கும்> பாகிஸ்தானில் லஷ்கர்>தொய்பாவின் தளத்தை விரிவுபடுத்துவதற்கும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி எதிர்ப்பு உத்தியின் தோல்வியே முக்கிய காரணம் என்று அறிவுசார் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .