2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

லைகருடன் மல்லுக்கட்டிய யுவராஜ் சிங்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ்சிங் சமீபத்தில் டுபாயில் உள்ள Fame Park எனும் தனியார் உயிரியியல் பூங்காவிற்குச் சென்றிருந்தார். 

 அங்கு ஓட்டகச் சிவிங்கி, கரடி மற்றும் பாம்பு போன்ற உயிரினங்களுக்கு உணவளித்து மகிழ்ந்த யுவராஜ் சிங் அவற்றுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார்.  

அத்துடன் அங்கு ‘ஆண் சிங்கம் மற்றும் பெண் புலியை வைத்து உருவாக்கப்பட்ட கலப்பினமான லைகருடன் கயிறு இழுக்கும் போட்டியிலும்  கலந்து கொண்டுள்ளார்.

 ஒரு பக்கம் கயிற்றை லைகர் இழுக்க மற்றொரு பக்கம் கயிற்றை யுவராஜ் சிங் மற்றும் அவருடைய 2 நண்பர்கள் சேர்ந்து இழுத்துள்ளனர்.  எனினும் யுவராஜ் சிங்கின்  குழுவானது லைகரிடம்  தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.

இதுகுறித்து வெளியான வீடியோானது தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .