2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வறுமையினால் குழந்தைகளை விற்கும் பெற்றோர்கள்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 04 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

மேலும் பல்வேறு நாடுகளும் வர்த்தக ரீதியிலான உறவைக் கடைபிடிக்கத் தயங்கி வருவதால் அங்கு  தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகள் நீடித்து வருவதாகவும்  இதனால்  மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாகவும், வறுமையின் காரணமாக  சிலர் தங்கள் குழந்தைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் தமது பருவ வயதுப் பெண் பிள்ளைகளை வயது முதிர்ந்த ஆண்களுக்கு பணத்திற்காக பெற்றோர்கள் திருமணம் செய்து கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X