2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

வாலுடன் பிறந்த குழந்தை

Ilango Bharathy   / 2021 நவம்பர் 08 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தையொன்று 12 சென்ரி மீற்றர் நீளமான வாலுடன் பிறந்த  சம்பவம் பிரேஸிலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின், ப்போர்டாலிஸா (Fortaleza) நகரில் உள்ள வைத்தியசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்குழந்தையின் பின்பகுதியில் 12 சென்டி மீற்றர்  வால் ஒன்று இருந்துள்ளதோடு அதன்  முடிவில் பந்து போன்ற அமைப்பு காணப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்குழந்தையின் வால் நரம்பு மண்டலத்துடன் இணையாமல் இருந்ததால் எந்தவித சிக்கலும் இன்றி  பெற்றோர்களின் சம்மதத்தோடு அறுவை சிகிச்சை மூலம் வாலை வைத்தியர்கள் அகற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .