2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விமான நிலையத்தில் பெண் பயணிகளின் அந்தரங்க உறுப்பில் சோதனை

Ilango Bharathy   / 2021 நவம்பர் 19 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் தோஹா விமான நிலையத்தில் பெண் பயணிகள் சிலருக்கு அந்தரங்க உறுப்பில் சோதனை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் விவாத பொருளாகி உருவெடுத்துள்ளது.

கடந்த வருடம்  இடம்பெற்ற இச்சம்பவம்  குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் அண்மைக்காலமாக பல விடயங்களை  வெளியிட்டு வருகின்றனர்.

குறித்த விமான நிலையத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பெண்களது கழிப்பறையில்   குறை பிரசவத்தில் பிறந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குழந்தையின் தாயை கண்டுபிடிப்பதற்கான விமானம் ஏற காத்து நின்ற  பெண் பயணிகளை  விமான நிலைய அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து அவர்களின் பெண் உறுப்பில் சோதனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் விமான நிலைய நிர்வாகம் மன்னிப்பு கேட்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 7 அவுஸ்திரேலிய பெண்கள் தற்போது இது குறித்து  விமான நிலைய  நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .