2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வெளிநாட்டுப் பணத்தைப் பயன்படுத்தத் தடை

Ilango Bharathy   / 2021 நவம்பர் 05 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் பணத்தைப் பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த சர்வதேச நிதி உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் ஆப்கானிஸ்தான் வர்த்தகர்களால் பன்னாட்டுச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அமெரிக்க டொலர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஆப்கானியர்கள் வர்த்தகம் செய்வதற்கு அமெரிக்க டொலரே பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு ஆப்கானியர்கள் அனைவரும் 'ஆப்கனி' நாணயத்தைத், தங்களது அனைத்து வர்த்தகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் மீறினால் வழக்கு தொடரப்படும் என்றும் தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள ஆப்கான் பொருளாதாரத்தை இந்த முடிவானது மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .