2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹமாஸ் நிலைகளைத் தாக்கிய இஸ்ரேல்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 16 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகளை இஸ்ரேலிய விமானம் இன்று தாக்கியுள்ளது.

பலஸ்தீனத்திலுள்ள காஸாவிலிருந்து நெருப்பு பலூன்கள் ஏவப்பட்டதை அடுத்தே இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

கடந்த மாத 11 நாள் மோதலை முடிவுக்கு கொண்டு வந்த யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு பின்னரான முதலாவது தாக்குதல் இதுவாகும்.

எவ்வாறெனினும், இரண்டு தரப்புகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அறிக்கைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காஸா நகரத்திலுள்ள, தென் நகரான கான் யூனிஸிலுள்ள ஹமாஸின் ஆயுத வளாகங்களை தமது விமானம் தாக்கியதாகத் தெரிவித்த இஸ்ரேல் இராணுவம், மீண்டும் மோதல் உள்ளடங்கலாக அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் தயாராகவுள்ளதாகக் கூறியுள்ளது.

காஸா எல்லைக்கு அருகிலுள்ள சமூகங்களிலுள்ள திறந்த வெளிகளில் 20 தீகளை நெருப்பு பலூன்கள் ஏற்படுத்தியதாக இஸ்ரேலிய தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .