2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில 5ஆவது கிரிக்கெட் போட்டி

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரிக்கும் மடவளை மதீனா தேசிய கல்லூரிக்கும் இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட்  மைதானத்தில 5ஆவது கிரிக்கெட் போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இப்போட்டி முடிவில் இரு அணிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி அணி 40 ஓவர் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.  மழை பெய்ததன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு  மீண்டும் 3.30 மணியளவில் போட்டி ஆரம்பமானது.  முழுமையாக போட்டியை முடிவு செய்வற்கு மடவளை மதீனா தேசிய கல்லூரிக்கு நேரம்  போதாமையால் போட்டிக்கால எல்லை வழங்கப்பட்டது.

மாலை 5.30 மணியளவில்  20 ஓவர்கள் முடிவடைந்ததுடன்,  மடவளை மதீனா தேசிய பாடசாலை 89 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 20 ஓவர் முடிவில் மதீனா கல்லூரி வெற்றிபெறுவதற்கு 91 ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்தது. 

போட்டியின்போது அக்குறணை அஸ்ஹர் கல்லூரி வீரர் சிலர் பல உபாதைகளுக்கு உள்ளானர். இதன் பின் போதிய வெளிச்சம் இல்லை என்ற காரணத்தால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இதை அடுத்து இரு அணிகளுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டதுடன் இரவு 7 மணியாகியும் முடிவுகள் நடுவரகளால் அறிவிக்கப்படவில்லை.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X