2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

15வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் 15வயதுக்கு உட்பட்டவர்களுக்கான  இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நடத்தவிருக்கின்றது.

மாவட்டங்களுக்கு இடையிலேயே இந்த போட்டியை நடத்தவிருப்பதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

பிறிமா கிண்ணத்துக்கான இப்போட்டிகள் 02.09.2013 நாடெங்கிலும் ஆரம்பமாகின்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு. வவுனியா மாவட்ட அணிகள் பங்கு கொள்ளும் போட்டிகள் வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வவுனியா, மட்டக்களப்பு மாவட்ட அணிகளுக்கிடையே 2 ஆம் திகதியும், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட அணிகளுக்கிடையே 3 ஆம் திகதியும், 4 ஆம் திகதி திருகோணமலை, வவுனியா மாவட்ட அணிகளுக்கு இடையேயும் போட்டிகள் இடம்பெறும்.

ஸ்ரீPலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இச்சுற்றுப்போட்டி நடத்தப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X